ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,800 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மாஸ்கோ : கொரோனா தொற்றால் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6800 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. பிரேசில் 2 வது இடத்தையும், ரஷ்யா 3 வது இடத்தையும் பிடித்துள்ளது. ரஷ்யாவில் தினந்தோறும் பாதிப்பு அதிகரித்து சராசரி பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6,800 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 620,794 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று முன்தினம் ரஷ்யாவில், 7,113 பேர் பாதிக்கப்பட்டனர்.


latest tamil news



புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. அத்துடன் மாஸ்கோவில் கொரோனாவிற்கு 813 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு ஒரே நாளில் 176 பேர் பலியாகினர். ரஷ்யாவில் மேலும் 92 பேர் நோய் தொற்றால் பலியாகினர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,781 ஆக அதிகரித்தது. நோய் பாதிப்புகளில் இருந்து இதுவரை 3,84,000 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X