சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தலைக்கு மேல் தொங்கும் கத்தி!

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தலைக்கு மேல் தொங்கும் கத்தி!

தலைக்கு மேல் தொங்கும் கத்தி!
'கொரோனா பிரச்னை முடிந்ததும், அடுத்ததாக நமக்குத் தான் குறி வைப்பர்; அதற்குள் தப்பிப் பிழைப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என, கவலைப்படுகிறார் ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ., ஆட்சியை அமைத்து விட்டனர். இதற்கு, காங்கிரசின் முக்கிய பிரமுகராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவே, ஆயுதமாக பயன்படுத்தப்பட்டார். ஆட்சியை கவிழ்த்ததற்காக, அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை பரிசளித்தது, பா.ஜ., மேலிடம். அடுத்ததாக, பா.ஜ., தலைவர்களின் கவனம், ராஜஸ்தான் மாநிலத்தின் மீது திரும்பிஉள்ளது. இங்கு காங்கிரசுக்கு, 107 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 126 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு, காங்., அரசுக்கு உள்ளது. பெரும்பான்மைக்கு, 101 உறுப்பினர்கள் தேவை.
எனவே, ம.பி., ஸ்டைலில், காங்கிரசிலிருந்து குறிப்பிட்ட சில, எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுத்து, கெலாட் ஆட்சியை கவிழ்க்க, வியூகம் வகுத்து வருகின்றனர், பா.ஜ., தலைவர்கள். தற்போது கொரோனா பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், ஆட்சி அமைக்கும் விவகாரத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.இதையறிந்த கெலாட், 'தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. கொரோனா கதை முடிந்ததும், நம் கதையும் முடிந்து விடும் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
27-ஜூன்-202009:44:50 IST Report Abuse
மூல பத்திரம் சந்தோசம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X