சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

டவுட் தனபாலு

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 டவுட் தனபாலு

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: சென்னையில், ஒரே நாளில், 14 ஆயிரம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவு அளிக்கிறது. இதை, 16 ஆயிரம், 20 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும், அதே அளவுக்கு உயர்த்த வேண்டும். அதன் வாயிலாக, கொரோனாவை விரைந்து ஒழிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் மருத்துவம் படித்த டாக்டர் என்பதால் தான், எப்படி கொரோனாவை ஒழிக்கலாம் என்பதை அறிந்து, தமிழக சுகாதாரத்துறைக்கு பாராட்டு தெரிவிக்கிறீர்கள். இதுபோல, தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் போக்கை, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மறந்து விட்டனவோ என்ற, 'டவுட்' அவர்களின் சமீபத்திய செயல்பாடுகளால் ஏற்படுகிறது!



தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி
: ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, வங்கிக் கடன், கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட கடன்களின் தவணை செலுத்துவதற்கு, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, ஆறு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும், கட்டாயப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: உண்மை தான். ரிசர்வ் வங்கி சொன்னதை வங்கிகளே பின்பற்றவில்லை; பிறகு, சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் எப்படி கேட்கும்... இதை பார்க்கும் போது, ரிசர்வ் வங்கியின் உத்தரவு, ரிசர்வ் வங்கிக்கு மட்டும் தான் பொருந்துமோ; பிற நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தாதோ என்ற, 'டவுட்' சாமானியர்களுக்கு ஏற்படுகிறது!



பத்திரிகை செய்தி:
சென்னையில் இதுவரை, 47 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 19 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநகராட்சி சார்பில், கூடுதலாக, 34 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வசதி, இனிவரும் காலத்திற்கேற்ப அதிகரிக்கப்படும்.
'டவுட்' தனபாலு: படுக்கை வசதிகள் ஏற்பாடு எல்லாம் சரி தான். கொரோனா துவக்கத்தில், சில கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கட்சிகளின் தலைமையகங்களில், கொரோனா சிகிச்சை முகாம் அமைத்துக் கொள்ளலாம் என்றனரே... அதை, தமிழக அரசு மறந்து விட்டதா அல்லது அவ்வாறு செய்தால், அ.தி.மு.க., தலைமையகத்தையும் கொடுக்க வேண்டி வரும் என அஞ்சுகிறதா என்ற, 'டவுட்' வருதே!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
27-ஜூன்-202012:57:46 IST Report Abuse
Aaaaa மருத்துவம் படித்த டாக்டர் என்று கூறி மற்ற டாக்டர்களை மட்டமாக சித்தரிக்க வேண்டாம்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஜூன்-202006:20:41 IST Report Abuse
D.Ambujavalli ஆரம்ப சூரத்தனத்தில் சொல்லிவிட்டார்கள். அவர்களும் பிறகு மூச்சு விடவில்லை, இவர்களும் கண்டுகொள்ளவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X