சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அடாவடி வசூல்!

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அடாவடி வசூல்!

அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அடாவடி வசூல்!

''ஆண்டவன்
ரேஞ்சுக்கு உசத்திட்டாங்கல்லா...'' என்றபடியே, அந்தோணிசாமி வீட்டில் விவாதத்தை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''அட... யாருங்க அது...'' என, விசாரித்தார் அந்தோணிசாமி.''ஆவின் உயர் அதிகாரிக்கு, சமீபத்துல பிறந்த நாள் வந்திருக்கு... இதை, எல்லா மாவட்டங்கள்லயும் இருக்கிற ஆவின் பொது மேலாளர்கள், ஊழியர்கள் உற்சாகமா கொண்டாடியிருக்காவ வே...
''அதோட விட்டா பரவாயில்லை... அரசியல்வாதி ரேஞ்சுக்கு, அதிகாரிக்கு பட்டங்களை சூட்டி, வாழ்த்தியிருக்காவ... உயர் அதிகாரி நிர்வகிக்கிற, 'வாட்ஸ் ஆப்' குரூப்ல, 'வெண்மை புரட்சி நாயகனே... ஆவினை காக்க வந்த ஆண்டவனே'ன்னு விதவிதமா பட்டங்களை
சூட்டியிருக்காவ வே...
''இதைப் பார்த்த நேர்மையான அதிகாரிகள், 'இந்தப் புகழ் மொழிகளை எல்லாம், அதிகாரியின் பர்சனல் நம்பருக்கு அனுப்புங்கப்பா... 'குரூப்'ல போட்டு இம்சை பண்ணாதீங்க...'ன்னு சொல்லியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
அங்கு ஓடி வந்த அந்தோணிசாமியின் பேரன், ''வாடிய
பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் வாடினேன்னு சொன்னது யாரு தாத்தா...'' எனக் கேட்க, ''வள்ளலார்...'' என்ற அந்தோணிசாமியே, ''கான்ட்ராக்டர்களை மிரட்டுறாங்க...'' என, அரட்டையை
தொடர்ந்தார்.''எந்த ஊருல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகள்ல, சாலை அமைக்கிற பணிகளை, ஒரே நபருக்கு டெண்டர் குடுக்க முயற்சிகள் நடந்துச்சுங்க... இதுக்கு, மாவட்டத்துல இருக்கிற, 21 முதல் நிலை கான்ட்ராக்டர்கள் எதிர்ப்பு தெரிவிச்சு, கோர்ட்ல வழக்கு போட்டாங்க...
''இந்த வழக்கை வாபஸ் வாங்கணும்னு சிலர் மிரட்டுறாங்க... அதுவும் இல்லாம, வழக்கு போட்ட கான்ட்ராக்டர்கள் மீது, மணல் கடத்துறதா பொய் வழக்குகளை போடுறாங்க...
''கான்ட்ராக்டர்களின் உரிமங்களை புதுப்பிக்கக் கூடாதுன்னு, அதிகாரிகளுக்கும் நெருக்கடி குடுக்கிறாங்க...'' என்றார்,
அந்தோணிசாமி.
''ஆண் குழந்தைன்னா, 1,000, பெண் குழந்தைன்னா, 500 ரூபாய் தரணும் பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அன்வர்பாய்.
''யாருக்கு, எதுக்கு பணம் தரணும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''பெரம்பலுார் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுல இருக்கிற நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் தான், இந்தத் தொகையை
கட்டாயமா கேட்டு வாங்குறாங்க...''அதுவும் இல்லாம,
அப்பப்ப, டீ, கூல் டிரிங்ஸ், வடை, டிபன்னு வாங்கி தரும்படி கேட்கிறாங்க பா... இது பத்தி, ஏழை மக்கள் ஏதாவது கேட்டா, 'தனியார் ஆஸ்பத்திரிக்கு போனா, 30 ஆயிரம், 50 ஆயிரம் செலவாகுமே...
''இங்க எல்லாமே ப்ரீயா தானே கிடைக்குது... குடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க'ன்னு வெட்டி நியாயம் பேசுறாங்க பா...''பெரம்பலுார் அரசு மருத்துவமனையில, எந்த சிகிச்சைக்கு போனாலும், பையில பணத்தோட தான் போகணும்...
''ஊரடங்கால, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் தான், இங்க போறாங்க... அவங்களிடம் வழிப்பறி பண்ணாத குறையா, பணம் பிடுங்குறாங்க பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
27-ஜூன்-202008:56:47 IST Report Abuse
Muraleedharan.M Govt. என்ன தூங்குதா
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஜூன்-202006:26:28 IST Report Abuse
D.Ambujavalli அப்படித் தெரிவிக்க லஞ்சம் கொடுக்க விட்டால் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு விடுவார்களா? எப்படியும் டிஸ்சார்ஜ் ஆகும்போது தெரிந்துகொள்கிறோம் என்று நாலு பேர் சொல்லிப் பார்க்கட்டும்
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
27-ஜூன்-202004:33:34 IST Report Abuse
Subbanarasu Divakaran பெங்களூரிலும் மற்ற கர்நாடக நகரங்கிலும் ஆண் குழந்தை 1000 பெண் குழந்தை 500 என்பது ரேட் சாமி இல்லாட்டி குழந்தயே கைக்கு வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X