பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன், 27, 1964

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள, பயோலி கிராமத்தில், 1964 ஜூன், 27ம் தேதி பிறந்தவர், பி.டி.உஷா.சிறு வயதிலிருந்தே, தடகள விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்றார். 1976ல், கேரள அரசு, பெண்களுக்கு என, கண்ணுாரில் துவக்கிய, விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்தார். 1979ல், தேசிய தடகளப் போட்டியில், 100 மீ., பிரிவில் பட்டம் வென்றார். கடந்த, 1980-ல், மாஸ்கோவில் நடந்த, ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக பங்கேற்றார். பதக்க வாய்ப்பை இழந்தாலும், விடாமுயற்சியால் சர்வதேச, ஆசிய, தேசிய அளவிலான போட்டிகளில், தங்கம் உட்பட, பல பதக்கங்களைக் குவித்தார். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில், 103 பதக்கங்களைக் குவித்துள்ளார். திருமணத்திற்கு பின்னும், தடகளப் போட்டியில் பங்கேற்றார். 2000ல், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கோழிக்கோடு அடுத்த, கொயிலாண்டி என்ற இடத்தில், 'உஷா' தடகளப் பள்ளியை நடத்தி வருகிறார். 'அர்ஜுனா, பத்மஸ்ரீ' உள்ளிட்ட, உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
தங்க மங்கை, பி.டி.உஷா பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X