பொது செய்தி

தமிழ்நாடு

கோவை தீயாய் பரவுது கொரோனா: பாதிப்பு 393 ஆக உயர்வு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோவை: கோவையில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளது.கோவையில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்துள்ளது. கோவை நேருநகர், கணபதியை சேர்ந்த 40 மற்றும் 48 வயது ஆண்கள், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, ஒண்டிப்புதுாரை சேர்ந்த 34, 54 வயது ஆண் பெண், விஸ்வாசபுரம் பகுதியை
கோவை, தீயாய், பரவுது,கொரோனா, பாதிப்பு, 393 ஆக, உயர்வு, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, new coronavirus cases, positive cases, corona patient, corona death, corona spread, coimbatote, tamil nadu, tn news, COVID-19 cases

கோவை: கோவையில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்துள்ளது. கோவை நேருநகர், கணபதியை சேர்ந்த 40 மற்றும் 48 வயது ஆண்கள், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, ஒண்டிப்புதுாரை சேர்ந்த 34, 54 வயது ஆண் பெண், விஸ்வாசபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண், சுந்தரபுரத்தை சேர்ந்த 31 வயது பெண், ரத்தினபுரியை சேர்ந்த 47 வயது ஆண், வீரபாண்டி பிரிவை சேர்ந்த 33 வயது பெண், காரமடையை சேர்ந்த 63 வயது மூதாட்டி, புதுப்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தில் தனியார் குடியிருப்பில் வசிக்கும், 30, 53 வயது பெண்கள் மற்றும் 55 வயது ஆணுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news
கே.கே.புதுாரை சேர்ந்த 48, 20 வயது பெண்கள் 10 வயது சிறுவன் மற்றும் 24 வயது ஆணுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கோவில்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது பெண், இருகூர் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், தெலுங்கு வீதியை சேர்ந்த 55, 47,60 வயது பெண்கள், 68, 39 வயது ஆண்கள், காந்திபுரம் பட்டேல் ரோட்டை சேர்ந்த 49 வயது ஆண், அசோகபுரத்தை சேர்ந்த 51 வயது ஆண், காமராஜர் வீதி, கே.கே.புதுாரை சேர்ந்த 21, 34 வயது ஆண்கள், 19, 40 வயது பெண்கள் மற்றும் சண்முகராஜபுரத்தை சேர்ந்த 49 வயது ஆண் என ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 347ல் இருந்து 393 ஆக உயர்ந்துள்ளது.


மேலும், கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் இன்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிறந்து 45 நாட்களே ஆன, பெண் குழந்தைக்கு, கடந்த 24ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், குழந்தைக்கு குடல் அடைப்பு பிரச்னையும் இருந்ததை அடுத்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
durairaj - coimbatore,இந்தியா
27-ஜூன்-202011:21:46 IST Report Abuse
durairaj கொரோனா illatha mavatam kovai endru sonna minister ippa enna solvar ??????????????
Rate this:
Cancel
durairaj - coimbatore,இந்தியா
27-ஜூன்-202011:15:45 IST Report Abuse
durairaj கோவை தீயாய் பரவுது கொரோனா அப்ப கொரோனா கோவை நாயகன் என்ன செய்கிறார் ???
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
27-ஜூன்-202008:44:58 IST Report Abuse
Srinivasan Rangarajan வெளி நாட்டில் இருந்து ......முதலில் டில்லியில் இருந்து .......... நடுவில் சென்னையில் இருந்து .... இப்போது யார் வந்தாலும் பயம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X