பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

சென்னை: தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கண்காணிக்கவும் சிசிடிவி கேமரா பொருத்துவது அவசியமாகிறது.



latest tamil news



இதன்படி அதிகம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக் கூடிய கடைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க மாவட்ட மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 755 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 695 கடைகளும், சேலம் மண்டலத்தில் 565 கடைகளும், சென்னையில் 535 கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. ஒரு கடைக்கு 2 கேமரா வீதம் 6000 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
27-ஜூன்-202010:00:47 IST Report Abuse
ravi தமிழ்நாட்டில் இருக்கும் ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளை லஞ்சத்தியிலே கொழுத்த அரசதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டுமென்றால் எல்லா அரசு அலுவகங்களிலும் CCTV காமெராக்களை பொருத்தவேண்டும் - குறிப்பாக காவல்துறைக்கு, வருவாய்துறைகள், கல்வித்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை போன்ற அலுவகங்களில் கட்டாயமாக CCTV காமெராக்களை பொருத்தவேண்டும் - அப்போதுதான் ஊழல் செய்யும் லஞ்சம் வாங்கும் பொருக்கி கம்மினாட்டிகளை உலகமறிய வாய்ப்பாகும்..
Rate this:
Cancel
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
27-ஜூன்-202009:57:39 IST Report Abuse
Ranjith Rajan மக்களுக்கு காவல் இல்லை. காவலர்களால் பாதுகாப்புமில்லை.. இங்கே அரசாங்கம் யாருக்கு காவல் போடுகிறது பாருங்கள். மக்களை விட டாஸ்மாக் தன் முக்கியம்.
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
27-ஜூன்-202009:25:49 IST Report Abuse
மு. செந்தமிழன் CCTV பொருத்தியாவது சாராயம் விற்க வேணுமா அது அவ்வளவு அத்தியாவசிய பொருளா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X