கொரோனா தடுப்பு: மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5லட்சத்தை கடந்தது.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5லட்சத்தை கடந்தது. அதே நேரத்தில் கொரோானாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2.88 லட்சமாக உள்ளது,மேலும் 15,700 பேர் பலியாகி உள்ளனர்.

நாட்டில் மகாராஷ்டிரா,தமிழ்நாடு,டில்லி , குஜராத், உ.பி.,ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான தொற்று எண்ணிக்கை உள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் இருந்து ஒரே நாளில் 1,129 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இது வரை இல்லாத வகையில் ஒரே நாளில் 5,024 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஒரே நாளில் 175க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

தலைநகர் டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,240 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ,091 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 2,492 ஆகவும் உள்ளது. டில்லியில் இன்று (26 ம் தேதி) ஒரே நாளில் 3,460 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


latest tamil newsமத்திய அமைச்சர் தலைமையில் கூட்டம்

கொரோனா பரவலை தடுப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நாளை(27 ம் தேதி) காலை11.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
27-ஜூன்-202009:50:58 IST Report Abuse
Chandramoulli இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளை, அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களை முன்னேற செய்கின்றன. இதில் நிறைய உண்மை உள்ளன. அரசியலும் முக்கிய காரணம். கடந்த மூன்று மாதங்களில் மக்கள் மற்ற நோய்களில் இருந்து தாக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். மக்கள் பெரிய பெரிய Operation இல்லாமல் மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டு நிம்மதியாக தான் உள்ளனர். பெரிய அளவில் மருத்துவனை பக்கம் யாரும் செல்லவில்லை. எந்த மருத்துவமனை , எந்த மருந்து தேவை என்பதை இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. மக்களை சிந்திக்க வைக்க கூட நேரம் இல்லாமல் பயம் கொள்ள வைத்ததே இந்த மாதிரி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் . அரசியல் தான் முக்கிய காரணம் .
Rate this:
Cancel
R.SAMINATHAMUTHU - KUALA BELAIT,புருனே
27-ஜூன்-202006:15:39 IST Report Abuse
R.SAMINATHAMUTHU Siddha medicines can cure this Corana within 7 days, even for Diabetic patients. It is real and experienced. After taking this medicines within 3 days can test, Corona will be traces or no more in the test. Medicines cost will be very less. But no Govt. dare enough to accept and challenge this to Corporate Companies. Or even, they are not yet set-up any committee to test this. Most of the hospitals are have good “Corana Business” and earning much., some hospitals demanding to deposit 5 Lakhs first. Even though there is no Allopathic medicine available, they are treating the Corana Patient? Only with “Kabasura kudineer” and it is very basic and preventive medicine. If govt. encourage our Siddha medicines and within another 7 days, No Corana in our state / India. Keep away the Corporate companies.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
26-ஜூன்-202021:45:10 IST Report Abuse
sundarsvpr வெள்ளம் எரிமலை பூகம்பம் சுனாமி புயல் போன்ற பேரிடர்களை தடுக்க முடியவில்லை . பாதிப்பை சரி செய்திடத்தான் முடியும். இந்த பேரிடர்கள் கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிகின்றன. அடுத்து வாழ்வை தொடங்குகிரோம். ஆனால் தோற்று மறையும் வரை நிம்மதி நிதானம் இழந்து தவிக்கிறோம். அறிவியல் மூலம் மருந்து காண இயற்கைதான் உதவி செய்யவேண்டும். இந்த நம்பிக்கையில் விரைவில் பாதிப்பில் இருந்து விடுபடுவோம் . முயற்சி திருவினையாக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X