சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வெளியே சுற்றிய 10 பேர் மீது வழக்கு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

குன்னூர்: குன்னூர் எல்லநள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகும் வெளியே சுற்றித் திரிந்த தனியார் தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



latest tamil news



பச்சை மண்டலமாக இருந்த நீலகிரியில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எல்லநள்ளி தனியார் ஊசி தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக அங்கு பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் இவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பலரும் வெளியே சுற்றுவதாக தகவல் வந்தது. மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் உத்தரவின் பேரில் நேற்று கேத்தி வருவாய் ஆய்வாளர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் 2 பெண்கள் உட்பட 9 பணியாளர்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட டிரைவர் என மொத்தம் 10 பேர் மீது தொற்று பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூன்-202007:32:26 IST Report Abuse
Lion Drsekar இப்போதுதான் நாடே ஒரு துறைக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டதே, என்ன பிரச்சனை இருக்கப்போகிறது, யார் வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிட்டது, மொத்தத்தில் நாட்டைப்பற்றிய சிந்தனை இல்லாமல் போய்விட்டது, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-202004:14:29 IST Report Abuse
J.V. Iyer ஐயோ பாவம். கரோனா தொற்றில் உயிர் இழந்த பிறகு, உடலை புதைக்கும் போது உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் இல்லாமல் அனாதையாக தூங்கி எறியப்படுவார்கள் என்பது நினைவில் இருந்தால் இப்படி செய்யமாட்டார்கள்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூன்-202000:25:12 IST Report Abuse
தல புராணம் அவர்களுக்கு நோய் தொற்று இருந்ததா? அவர்கள் அனைவரும் நோய் தொற்று இல்லாதவர்கள், ஆனால் தனிமை படுத்தப்பட்டவர்கள்என்பதை ஏன் யாரும் இங்கு பதிவிடவில்லை? அந்த உச்சி தொழிற்சாலையை ஏன் பாதுகாப்பு வசதி இல்லாமல் நடத்தினார் என்று தொழிற்சாலை முதலாளியின் மேல் ஏன் வழக்கு பதிவாகவில்லை? முதலாளிக்கு ஸலாம், தொழிலாளிக்கு உதை.. எளியோரை எட்டி உதைத்து வலியோருக்கு வணக்கம் போடும் நிர்வாகமும், மனிதர்களும்.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
27-ஜூன்-202020:41:18 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுதொற்று இல்லைன்னு உறுதிப்படுத்திக்கிட்டா அவனுங்க சுத்துனானுங்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X