ராஜிவ் அறக்கட்டளைக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நன்கொடை'

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
PM Relief Fund, donated, Rajiv Gandhi Foundation, UPA era, BJP, Chief, JP Nadda,ராஜிவ் அறக்கட்டளை, பிரதமர் நிவாரணம்,நிதி,நன்கொடை

புதுடில்லி : 'காங்., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளது' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், நேற்று கூறியிருந்ததாவது:பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது, நாடு முழுதும் பேரிடர்களை சந்திக்கும் மக்களுக்கானது. ஆனால், மத்தியில் காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நன்கொடை வழங்கப்பட்டுஉள்ளது.

பிரதமர் நிவாரண நிதி வாரியத்தில் தலைவராகவும், ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தது, சோனியா தான்.




நடைமுறை


எந்தவித அறவுணர்வும் இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல், இதன் நடைமுறைகள் இருந்துள்ளன.இந்திய மக்கள், தாங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை, பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். சக மனிதனுக்கு உதவ அனுப்புகின்றனர்.


துரோகம்


பொதுமக்கள் பணத்தை, ஒரு குடும்பம் நடத்தும் அறக்கட்டளைக்கு, நன்கொடையாக அளிப்பது பெரிய மோசடி மட்டுமல்ல; மக்களுக்கு இழைத்த துரோகமாகும்.ஒரு குடும்பத்தின் பணத்தாசை, நாட்டையே பாதித்துள்ளது. இப்படி சுயலாபத்துக்காக, மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்ததற்கு, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரசின் ஏகாதிபத்திய பரம்பரை சுயலாபக் கொள்ளைக்காக, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு, நட்டா கூறியுள்ளார்.


திசை திருப்பும் முயற்சி


நட்டாவின் குற்றச்சாட்டு குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறியதாவது: எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து எதுவும் பேசாமல், பிரதமர் மவுனம் காக்கிறார். ஆனால், சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதை விட்டு விட்டு, காங்கிரசுக்கு எதிராக, பா.ஜ., சண்டை போடுகிறது. சீன விவகாரத்தில், மத்திய அரசு மீது, மக்கள் கோபமாக உள்ளனர். இதை திசை திருப்பவே, காங்கிரஸ் மீது ஆதாரமில்லாமல், பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
28-ஜூன்-202000:12:50 IST Report Abuse
unmaitamil இங்கு சிலர் நாட்டில் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என ஒரு பொய்யை பரப்பநினைக்கிறார்கள். ஏதாவது ஒரு ஊரில் இத்தனைபேர் பட்டினியால் இறந்தார்கள் என ஆதாரத்துடன் சொல்லவேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை கொடுத்து காப்பாற்றுகிறது. அதற்க்கு நன்றி சொல்லாமல் இப்படி பொய்யாக ஊளையிட கூடாது.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூன்-202022:20:44 IST Report Abuse
தமிழ்வேல் மோடிஜிக்குத்தான் சீன அதிபர் வேண்டப்பட்டவராச்சே..... ஊடுருவல் நடந்தபின் அல்லது தாக்குதலுக்குப் முன்னோ அல்லது பிறகோ சீன அதிபருக்கு போனாவது செய்தாரா ?
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
27-ஜூன்-202019:19:36 IST Report Abuse
dina சுர்ஜேவாலா செய்தி தொடர்பாளர் சொல்வது சோனியாவை குளிர்விக்கத்தான் என்று நன்றாக தெரிகிறது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிப்பதை விட்டு சீன பிரச்சினை நடுவில் விடுகிறார்கள் பொய்யர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X