20 வீரர்கள் பலியானது எப்படி? பிரதமருக்கு சோனியா கேள்வி!

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement
புதுடில்லி: ''நம் நிலப் பரப்புக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவவில்லை என, பிரதமர் கூறுகிறார்; அப்படியானால், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தது எப்படி என்ற கேள்விக்கு, பிரதமர் பதில் அளிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா - சீனா எல்லை பிரச்னை குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளதாவது:இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள்
sonia gandhi, sonia, Congress, LAC, India, China, PM, Modi, 20 வீரர்கள் பலி, பிரதமர், சோனியா, கேள்வி

புதுடில்லி: ''நம் நிலப் பரப்புக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவவில்லை என, பிரதமர் கூறுகிறார்; அப்படியானால், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தது எப்படி என்ற கேள்விக்கு, பிரதமர் பதில் அளிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா - சீனா எல்லை பிரச்னை குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளதாவது:

இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள் ஊடுருவவில்லை என பிரதமர் கூறுகிறார். சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர், தங்கள் உயிர்களை தியாகம் செய்துஉள்ளனர். நம் நிலப்பரப்பை சீன ஆக்கிரமிக்கவில்லை என்றால், நம் வீரர்கள் எப்படி இறந்தனர்? இதற்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.


பதில் தேவை


பிரதமரும், மத்திய அரசும் தங்கள் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது.செயற்கைகோள் புகைப்படங்களும், ராணுவ நிபுணர்களும், நம் நிலப் பகுதிக்குள் சீன வீரர்கள் இருந்ததை உறுதி செய்கின்றனர். லடாக்கில் சீனா ஆக்கிரமித்த நம் பகுதியை, மோடி அரசு, எப்போது திரும்ப பெறும் என்ற கேள்விக்கு பதில் தேவை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


சொல்லுங்கள்!


காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: நம் நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தை கூட, யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றும், நம் எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றும் பிரதமர் கூறினார். லடாக்கில் வசிப்பவர்களும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும், சீனா, நம் நிலப் பகுதியை ஆக்கிரமித்து விட்டதாக கூறுகின்றனர்.

செயற்கைகோள் படங்களும் அதை உறுதி செய்கின்றன. நம் நாட்டுக்குள் ஒரு இடத்தை மட்டும், சீன வீரர்கள் ஆக்கிரமிக்கவில்லை; மூன்று இடங்களில் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே, பிரதமர் மோடி, இப்போதாவது இந்த விஷயத்தில் நாட்டு மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். நம் பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என அவர், தொடர்ந்து கூறினால், அது, சீனாவுக்கு சாதகமாகி விடும் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


சீனாவை தாக்குங்கள்!


லடாக் அருகே, நம் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மத்திய ஆட்சியாளர்கள், தங்கள் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் கட்சியினர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எங்கள் மீதுள்ள கோபத்தை, சீனா மீது காட்டுங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட நம் நாட்டின் பகுதிகளை மீட்பதற்கு முயற்சியுங்கள்.
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்., லோக்சபா குழு தலைவர்

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
28-ஜூன்-202007:25:03 IST Report Abuse
sridhar எல்லை பகுதிக்கு வா , எப்படி செத்தாங்கன்னு காட்டறோம் . தேசத்துக்கு நல்லது நடந்த மாதிரியும் இருக்கும்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
27-ஜூன்-202023:13:28 IST Report Abuse
unmaitamil நம் இருபது ராணுவ வீரர்கள் இறந்ததற்கு சீனாவை பார்த்து இதுவரை கண்டனம் தெரிவிக்காத இந்த கயவர் , ஒற்றர் கூட்டம் அரசாங்கத்தை பார்த்து கேள்வி கேட்க அருகதை இல்லை. மேலும் 2008,ல் சீனாவுடன் அம்மாவும் மகனும் போட்ட ரகசிய ஒப்பந்தம் என்ன என்பதை மக்களுக்கு சொல்லிவிட்டு உன் கேள்வியை கேள் ??? பப்பு குடும்பம் எதிரியின் உளவாளி அல்ல என்பதை நிரூபித்துவிட்டு கேள்வியை கேள் ??? நம் ராணுவ வீரர்கள் எல்லையில் ரோந்து போனபோது நம் எல்லையில் இருந்த சீனாவின் கூடாரங்களை அப்புற படுத்த எச்சரித்தனர் . ஏற்கனவே ஒருவாரத்திற்கு முன்பு இதுபோன்ற கூடாரத்தை நம் வீரர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். இந்தமுறை அப்புறப்படுத்தும்போது நம் வீரர்கள் சீன வீரர்களை அடித்து விரட்டிவிட்டனர். மேலும் அவ்வாறு நடக்காமல் சிலமணி நேரம் நம் வீரர்கள் அந்த இடத்தில் காவல் இருந்துள்ளனர். அந்தநேரத்தில் சீனராணுவம் அதிக ஆட்களுடன் வந்து நம் வீரர்களை தாக்க, நம் வீரர்களும் கூடுதல் வீரர்களை கூட்டிச்சென்று, இரண்டு கிலோமீட்டர்வரை விரட்டி சென்று சீன ராணுவத்தை துவம்சம் செய்துள்ளனர். அதில் நூற்றுக்கும் மேலான சீன வீரர்கள் பலியாயினர். இப்போது இரண்டு ராணுவமும் பழைய நிலையில் நிற்பதாக அதில் ஈடுபட்ட நம் வீரர்கள் கூறியது நம் நாட்டில் எல்லோரும் அறிந்த தகவல். இதுவரை அறியாதவர்கள் தெரிந்துகொள்ளவும். இந்திய நாட்டுப்பற்றுள்ள மக்கள் நம் ராணுவத்தின் இந்த தகவலை நம்புகின்றனர். நம் ராணுவத்தை நம்பாமல் கேள்விகேட்கும் அந்நிய கைக்கூலிகள் நேராக நாட்டின் எல்லைப்பகுதிக்கு சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம்.
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
27-ஜூன்-202022:40:09 IST Report Abuse
Subramaniyam Veeranathan sorry they are from Pakistan not living in India to accept Modi as their PM.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X