'கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.2.3 லட்சம் கோடி தேவை'

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
WHO, World Health Organization, fighting, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, $31.3 billion, corona tests, corona treatments, corona vaccines, disease

லண்டன் : கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராட உலக சுகாதார நிறுவனம் தலைமையிலான கூட்டணிக்கு அடுத்த 12 மாதங்கள் ரூ.2.3 லட்சம் கோடி தேவை, தற்போது உடனடியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவை என வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு மருந்து தயாரிப்புகள் போன்றவற்றில் அரசாங்கங்கள், சுகாதார நிறுவனங்கள், விஞ்ஞானிகள், நன்கொடையாளர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க ஆக்ட் (அக்செஸ் டூ கோவிட்-19) ஆக்சலரேட்டர் என்ற அமைப்பை ஏப்ரல் இறுதியில் உலக சுகாதார நிறுவனம் தொடங்கியது.


latest tamil news


இவ்வமைப்பு சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2021-ன் மத்தியில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 50 கோடி பரிசோதனைகள் மற்றும் 24.5 கோடி நபர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதை உலக சுகாதார நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே போல் 2021 இறுதியில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்காக நூறு கோடி தடுப்பூசிகள் வாங்கப்பட வேண்டும். இதற்காக குறிப்பிடத்தக்க முதலீடு அவசியம்.

அடுத்த 12 மாதங்களுக்கு பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பூசிகளுக்காக 31.3 பில்லியன் டாலர் (ரூ.2.3 லட்சம் கோடி) தேவை. தற்போது வரை 3.4 பில்லியன் டாலர்களை சேகரித்துள்ளோம். 27.9 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதில் 13.7 பில்லியன் டாலர்கள் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) உடனடியாக தேவைப்படுகிறது. ஐ.எம்.எப்., மதிப்பீட்டின்படி இந்த் நிதி தேவையானது, தொற்றுநோயால் தற்போது உலக பொருளாதாரம் ஒவ்வொரு மாதமும் இழந்து வரும் தொகையில் பத்தில் ஒரு பங்கை விட குறைவானது. ஏற்கனவே 468,000 ஆயிரம் பேர் உயிர்களை இழந்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202011:55:00 IST Report Abuse
Tamilan வெறும் பில்லியன் டாலர்கள் வைத்திடுக்கும் இந்தியாவுக்கே இது பெரிய விஷயமல்ல. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒரே வாரத்தில் லச்சம் கொடிகள் சுருட்ட முடிகிறது . இதைப்போல் பற்பல மடங்காது திறன் வாய்ந்த உலக நாடுகளுக்கு இதெல்லாம் கொசுறு போன்று . டிரில்லியன் டாலர்களை , சுண்டுவிரலில் , நிமிடத்தில் சம்பாதித்து விட முடிகிற நாடுகளை கொண்ட ஐ நாவுக்கு ஏன் கவலை?. கோடிக்கணக்கான கோடிகளை நிமிடத்தில் மக்களிடம் கொள்ளையடித்து கொண்டு வந்து சேர்க்கும் திறன் கொண்ட நாடுகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு , அதுவும் ஐநாவின் அதிகாரமிக்க பதவிகளில் வைத்துக்கொண்டு லச்சம் கொடிகளுக்கெல்லாம் கவலைப்பட்டால் விஞ்சான உலகத்தில் உலகை எப்படி வெற்றிகரமாக கொண்டுசெல்ல முடியும் ?.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஜூன்-202010:32:34 IST Report Abuse
Malick Raja இந்த தொகை இந்தியாவில் மட்டுமே இருக்கின்ற 100 மகா மெகா பணக்கார்களிடமுள்ள இருப்பில் 30% எடுத்தால் 5 லட்சம் கோடிகள் கிடைத்துவிடும். அப்புறம் முன்னாள் இந்நாள் பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை இருந்தவர்களை இருப்பவர்களிடம் 60% பிடித்துதால் குறைந்த பட்சம் 10 லட்சம் கோடி ரூபாய்கள். கில்லாடி அரசு ஊழியர்கள் முன்னாள் இந்நாள் என அனைவரிடமும் 50% பிடுங்கினால் 5 லட்சம் கோடி ரூபாய்கள் கிடைக்கும். அதன்பின் பெரிய வியாபாரிகள் பினாமிகள் நிறுவனங்கள் என அனைவரிடமும் 30% சதவீதம் எடுத்தால் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் வரும். எந்த அண்டைநாடும் நம்மிடம் கட்டுப்படும். அண்டைநாடுகளும் நம்வழியில் செல்லும் அவர்களும் உயர்வார்கள். ஆனால் செயல்படுத்த நியாயமான ஆள் இதுவரை இந்தியாவில் இல்லை என்று சொல்ல முடியாது. பலரையும் முளையிலேயே கிள்ளியெறியும் வளம்படைத்த அரசியல் தொற்றுவியாதியஸ்தர்களால் பலரும் அழிக்கப்பட்டுள்ள நிலையம் வெளிப்படை. ஒரு துறை கூட இந்தியாவில் குறைந்த பட்ச 25% அளவில் கூட நியாயமாக இருப்பதில்லை இருந்ததுமில்லை
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-ஜூன்-202022:44:32 IST Report Abuse
தமிழ்வேல் போதாது, மொட்டைபோட்டு ஊர்வலம் போகணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X