பேரம்பாக்கத்தில் முழு கடையடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரம்பாக்கத்தில் முழு கடையடைப்பு

Added : ஜூன் 26, 2020
Share

பேரம்பாக்கம் : பேரம்பாக்கத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகர் சங்கத்தினர், நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கிராமத்தில், கடந்த, 19ம் தேதி இரவு, ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், போலீசார் கடைகளை மூடக் கூறினர்.இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பகுதியில் மொபைல் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், 31 மற்றும் அவரது தந்தை ஜெயராஜ், 63 ஆகிய இருவரையும் போலீசார் பலமாக தாக்கி வழக்கு பதிந்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதில், படுகாயமடைந்த இருவரும் இறந்தனர். இந்த செயலைக் கண்டித்து, நேற்று, பேரம்பாக்கம் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என கோரி, பேரம்பாக்கம் வியாபாரிகள், நேற்று, காய்கறி, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் அடைத்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X