சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5,863 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : ஊரடங்கு உத்தரவை மீறி, ஜாலியாக உலா வந்த, 6,688 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து, 5,863 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த, 19ம் தேதி முதல் அமலில் உள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிர, உரிய, 'இ - பாஸ்' இன்றி, தேவையின்றி யாரும், வரக்கூடாது என, கலெக்டர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இருப்பினும், இதை மீறி, பலரும் தேவைஇல்லாமல், இருசக்கர வாகனத்தில், சாலைகளில் வலம் வந்தனர்.

இதை கட்டுப்படுத்த, திருவள்ளூர் மற்றும் சென்னை மாநகர காவல் துறை, வருவாய் துறையினர் இணைந்து, பணியாற்றி வந்தனர்.இதுவரை, திருவள்ளூர் காவல் மாவட்டத்தில், 5,611 வழக்கு பதிவு செய்து, 5,031 வாகனங்கள். சென்னை மாநகர காவல் எல்லையில், 1,077 வழக்கு பதிந்து, 832 வாகனங்கள் என, மொத்தம், 6,688 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5,863 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X