பொது செய்தி

தமிழ்நாடு

'சல்லடை ஆகிறது அம்மையார்குப்பம்'

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஆர்.கே.பேட்டை : தண்ணீர் பஞ்சத்தில், கடந்த ஆண்டு விஸ்வரூபம் கண்ட ஊராட்சியில், தற்போது ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியில், கடந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. ஏதேனும் ஒரு பகுதியில் நித்தம் ஒரு போராட்டம் என, நடந்து வந்தது.ஒன்றிய நிர்வாகமும், தண்ணீருக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது, மீண்டும் அத்தகைய சூழல் எழக்கூடாது என்பதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனமாக உள்ளனர்.பதவியேற்றுக் கொண்ட முதல் ஆண்டிலேயே மக்களின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்பதில் குறியாக இருந்து வருகின்றனர்.

இதன்படி, அடிப்படை தேவையான குடிநீருக்காக, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என, பல்வேறு தரப்பிலிருந்து, ஒவ்வொரு ஆழ்துளை கிணறுக்கும் 3 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏராளமான ஆழ்துளை கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.தெருவுக்கு தெரு என, ஒரு பகுதியும் விடுபடாமல், தினசரி ஏதேனும் ஓரிடத்தில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.பூமியை, 400 - 500 அடி ஆழம் வரை துளைத்து புதிதாக போடப்படும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, ஒன்றிய நிர்வாகத்தின் இந்த செயல், பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X