பொது செய்தி

தமிழ்நாடு

மணவாள நகர் காவல் நிலையம் மூடல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மணவாள நகர் : காவலர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மணவாள நகர் காவல் நிலையம் மூடப்பட்டது.

மணவாள நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு, பரிசோதனை மேற்கொண்டதில், நேற்று, தொற்று உறுதி செய்யப்பட்டது.தொற்று பரவலை தடுக்கும் வகையில், காவல் நிலையம் மூடப்பட்டது. காவல் நிலையம் தற்காலிகமாக, அதே பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்படுகிறது.அதை தொடர்ந்து, காவல் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி முழுதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்தது.

திருவள்ளூர் மாவட்ட எல்லையான மணவாள நகர் பகுதி வழியாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளரின் ஓட்டுனருக்கு தொற்று உறுதியாகி உள்ளது போலீசாரை கவலை அடையச் செய்துள்ளது.மேலும், காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் உட்பட இரு காவலர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X