பொது செய்தி

தமிழ்நாடு

திருமழிசை மார்க்கெட் சீரமைப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : மழையால் சேதமடைந்த, திருமழிசை மார்க்கெட் சீரமைக்கப்பட்டு வருகிறது.

திருமழிசை தற்காலிக மொத்த விற்பனை காய்கறி சந்தை, சமீபத்தில் பெய்த மழையால், சேறும், சகதியுமாக மாறியது. அதை சீரமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.இப்பணியை, வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர் ரெட்டி, கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது, 'திருமழிசை மொத்த விற்பனை காய்கறி சந்தையில், 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. பள்ளங்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றி, கனரக இயந்திரங்களை கொண்டு அனைத்து பகுதிகளிலும் நிலத்தை சமன்படுத்தி சீர் செய்யும் பணி விரைவில் நிறைவடையும்' என, கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X