பொது செய்தி

தமிழ்நாடு

'மகளிர் குழுக்களுக்கு ரூ.8.92 கோடி கடன்'

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : ''மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 8.92 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்,'' என, கலெக்டர் ஜான்லுாயிஸ் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில், 10 தனிநபர் தொழில் முனைவோருக்கு, 2.10 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் நிகழ்ச்சி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் ஜான்லுாயிஸ் பங்கேற்று, மேற்கண்ட நபர்களுக்கு, நிதி உதவிகளை வழங்கி பேசியதாவது;மாவட்டத்தில், துணி வியாபாரம் உள்ளிட்ட சுய தொழில் துவங்க, ஊரக புத்தாக்கத் திட்டத்தில் கடன் வழங்கப்படுகிறது.

இதில் ஒருவருக்கு, அதிகபட்சமாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வறுமை ஒழிப்பு சங்கம் மூலம், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கையர், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக, ஒருவருக்கு, 2 லட்சம் ரூபாய் வீதம், 952 பேருக்கும், 8,901 மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், 8.92 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X