பொது செய்தி

தமிழ்நாடு

நீராதாரத்திற்கு வழிவகுத்த சோலை பொய்கை குளம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மாமல்லபுரம்: சோலைப்பொய்கை குளத்தை துார் வாரியதால், தண்ணீர் தேங்கி, மாமல்லபுரத்தில் நீராதாரம் மேம்பட்டுள்ளது.

மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, புறவழி சந்திப்பு பகுதியில், பொதுப்பணித் துறையின் கீழ், சோலைப்பொய்கை குளம் உள்ளது.இப்பகுதி விவசாயிகள், நீண்டகாலத்திற்கு முன், குளத்து நீரில் பாசனம் செய்து, நெல் பயிரிட்டனர். நாளடைவில் குளம் துார்ந்து, படிப்படியாக விவசாயமும் அழிந்தது.இதற்கிடையே, குளத்தின் பகுதியை ஒட்டி, விடுதிகள் கட்டடங்கள் பெருகிய நிலையில், குளத்து நீராதாரம் அவசியமானது.

இச்சூழலில், மாமல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு சங்கம், குளத்தை துார் வார, அரசிடம் கோரிக்கை விடுத்தது. மாவட்ட நிர்வாகம் அனுமதித்ததை அடுத்து, கடந்த ஆண்டு, குளம் துார் வாரப்பட்டது.கடந்தாண்டு பெய்த மழை நீர், அவ்வப்போது பெய்த மழையால், இந்த குளத்தில் தண்ணீர் சேகரமாகி, தற்போதும் நீர் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X