பொது செய்தி

தமிழ்நாடு

பரிசோதனை செய்யப்படவில்லை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருக்காலிமேடில், வீடு, வீடாக வெப்ப பரிசோதனை செய்ய வந்த, சுகாதார ஊழியர்கள், 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் பரிசோதனை செய்யவில்லை என, புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு பாலாஜி நகரில், நேற்று முன்தினம், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என, வீடு வீடாக பரிசோதனை செய்யபட்டது.இப்பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள், வீட்டில் உள்ளவர்களை, 'தெர்மல் ஸ்கேனர்' கருவியால், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவில்லை என, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, பாலாஜி நகர் பகுதிவாசிகள் கூறியதாவது:

வெப்பநிலை பரிசோதனை செய்ய வந்த ஊழியர்கள், தெர்மல் ஸ்கேனர் கருவியால் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்காமல், காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளதா என, கேட்டனர்.காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறிவிட்டு, காய்ச்சல் இல்லாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரையை வழங்கிவிட்டு சென்றனர். இதனால், 100 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்ப நிலை உள்ளவர்களை கண்டறியாமலே சென்றனர்.எனவே, பாலாஜி நகர் உட்பட, சோதனை மேற்கொள்ளும் அனைத்து இடங்களிலும், தெர்மல் ஸ்கேனர் கருவியால் பரிசோதனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X