3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஸ்ரீநகர்; ஜம்மு -- காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாரா பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கிஇருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சி.ஆர்.பி.எப்., வீரர் ஷமல் குமாரும், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த, நிஹான் யவார் என்ற, 8 வயது சிறுவனும் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் இருவரும், பிஜ்பெஹாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலியாகினர்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதாக, ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.பயங்கரவாதிகளால் சிறுவன் கொல்லப்பட்டதற்கு, ஜம்மு - காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் ஒமர் அப்துல்லா, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சேவா உலர் பகுதியில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை, நேற்று முன்தினம், பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என, ராணுவ அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X