சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு நபரின் வீட்டில் 10 சவரன் திருட்டு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : கோகுலபுரத்தில், கொரோனா தொற்று பாதித்தவர் வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

செங்கல்பட்டு, கோகுலபுரம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பழனி, 52. இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், பழனி மற்றும் குடும்பத்தினருக்கு, 19ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மதுராந்தகம் பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பழனியின் உறவினர், நேற்று, அவரது வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.பீரோவிலிருந்த, 10 சவரன் நகைகள், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இருசக்கர வாகனம் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.உறவினர் புகாரையடுத்து, செங்கல்பட்டு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X