பொது செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய பணிக்கு மட்டும் அனுமதி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த, அணுசக்தித் துறை, கல்பாக்கம், அணுபுரம் நகரிய பகுதிகளில் பலருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம், அணுசக்தித் துறை ஊழியர்கள் உள்ளிட்ட, 25 பேர், தொற்றால் பாதிக்கப்பட்டதால், இப்பகுதியினர் பீதி அடைந்தனர்.இதனால், சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார மைய செவிலியர் குழுவினர், நேற்றில் இருந்து, அணுசக்தி, நகரியத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில், நகரிய பகுதிகளில், நேற்று இரவு, 9:00 மணி முதல், அடுத்த, 10 நாட்களுக்கு, முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக, அணுசக்தித் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பணி களை மட்டும் மேற்கொண்டு, நகரிய பகுதிகளை மூடுவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் வழங்க, ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், துறை வாகனம் தவிர்த்து, பிற வாகனம் நுழைய அனுமதி இல்லை என்றும், துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X