தமிழ்நாடு

ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 4,415 பேருக்கு, வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில், 2,463 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, தனியார் மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த, மூன்று பேர், நேற்று இறந்தனர். இதுவரை, 68 பேர் இறந்துள்ளனர். தாம்பரம் - 68, செங்கல்பட்டு - 58, பல்லாவரம் - 56, வண்டலுார் - 18, திருப்போரூர் - 13, திருக்கழுக்குன்றம் - 12, மதுராந்தகம் - ஐந்து, செய்யூர் - இரண்டு என, 232 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேர் என, மொத்த பாதிப்பு, 4,651 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் 185

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று, நேற்று முன்தினம், 3,092ஆக இருந்தது.நேற்று, 185 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை, 3,277ஆக உயர்ந்தது.இதுவரை, 1,923 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 55 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 1,299 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 88

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று புதிதாக, 88 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.காஞ்சிபுரம் நகராட்சியில் - 33, குன்றத்துார் தாலுகா - 43, காஞ்சிபுரம் - மூன்று, வாலாஜாபாத், உத்திரமேரூர் - தலா இரண்டு, ஸ்ரீபெரும்புதுார் - ஐந்து பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,435 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X