பொது செய்தி

இந்தியா

ஐந்து லட்சத்தை கடந்த பாதிப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுடில்லி; நாட்டில், நேற்று ஒரே நாளில், 17 ஆயிரத்து, 296 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது

.இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:நேற்று ஒரே நாளில், நாடு முழுதும், 17 ஆயிரத்து, 296 பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நான்கு லட்சத்து, 90 ஆயிரத்து, 401 ஆக உயர்ந்துள்ளது.பாதிப்பில், மஹா., முதலிடத்தில் உள்ளது.

இங்கு, 1.48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில், 73 ஆயிரத்து, 780 பேரும், தமிழகத்தில், 70 ஆயிரத்து, 977 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.அடுத்ததாக, குஜராத்தில், 29 ஆயிரத்து, 520; உ.பி.,யில், 20 ஆயிரத்து, 193; ராஜஸ்தானில், 16 ஆயிரத்து, 296; மே., வங்கத்தில், 15 ஆயிரத்து, 648 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில், 2.85 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இது, குணமடைந்தவர்களின் விகிதத்தை, 58.24 சதவீதமாக அதிகரித்துஉள்ளது.

நேற்று, கொரோனாவால், 407 பேர் இறந்துள்ளனர். மஹா.,வில், 192; டில்லியில், 64; தமிழகத்தில், 45; குஜராத்தில், 18; மே., வங்கம் மற்றும் உ.பி.,யில், தலா, 15; ஆந்திராவில், 12; ஹரியானாவில், 10 பேரும் இறந்துள்ளனர்.இவர்களுடன், நாட் டில் பலியானோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 301 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையில், 6,931 பேருடன், மஹா., முதலிடத்தில் உள்ளது. டில்லி, 2,429 பேருடன், இரண்டாம் இடத்திலும், குஜராத், 1,753 பேருடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன.தமிழகத்தில், 911; உ.பி.,யில், 611; மே., வங்கத்தில், 606; ம.பி.,யில், 542; ராஜஸ்தானில், 379; தெலுங்கானாவில், 230 பேரும் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X