அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு?

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளதால், ஜூலை, 1 முதல், மேலும், 15 நாட்களுக்கு, ஊரடங்கை நீட்டிக்க, அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக, வரும், 29ல், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின், ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகலாம். அதே நேரத்தில், மாவட்டங்களிலும் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்குள்ள
lockdown, Covid 19, Stay Home, Quarantine, TN Corona Updates, TN Health, TN Fights Corona, Corona, TN Corona, TN Govt, coronavirus, TamilNadu, curfew
ஊரடங்கு,15 நாட்கள், நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளதால், ஜூலை, 1 முதல், மேலும், 15 நாட்களுக்கு, ஊரடங்கை நீட்டிக்க, அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக, வரும், 29ல், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின், ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகலாம். அதே நேரத்தில், மாவட்டங்களிலும் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்குள்ள ஊரடங்கு தளர்வுகளை தொடர்வதா, ரத்து செய்வதா என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில், மார்ச், 24 முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பை அறிவிக்கிறார்; அத்துடன், சில தளர்வுகளும் அறிவிக்கப்படுகின்றன.


ஆலோசனை


இம்மாதம், 15ம் தேதி, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நோய் பரவல் அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் தளர்வுகளை நீக்கி, முழு ஊரடங்கை அறிவிக்கும்படி, மருத்துவ குழு பரிந்துரை செய்தது.அதை ஏற்று, 19 முதல், 30ம் தேதி வரை, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கை, முதல்வர் அறிவித்தார். அதன் பின், மதுரை, தேனி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

மாவட்டங்களை தாண்டிச் செல்ல, 'இ - பாஸ்' பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மண்டலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாவட்டத்திற்குள் மட்டும் இயக்கப்படுகிறது.வரும், 30ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் உள்ளனர்.

ஒரு வாரமாக, அனைத்து மாவட்டங்களிலும், நோய் பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தளர்த்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, நோய் பரவல் தடுப்பு குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், 29ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.


மருத்துவத்துறை அறிவுரை


இது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
வல்லரசு நாடுகளில் கூட, கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியாத கால கட்டத்தில், தமிழகத்தில் கடும் முயற்சி எடுத்து, வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்துள்ளோம்.
உலக சுகாதார அமைப்பும், மத்திய சுகாதாரத் துறையும் ஒவ்வொரு கருத்தை கூறுகின்றன. இந்த புதிய நோயை, இந்த காலகட்டத்தில் கட்டுப்படுத்த முடியும் என, யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.

மருத்துவத் துறையினர் அறிவுரைப்படி, அரசுகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தகுந்த மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே, இந்த நோயை ஒழிக்க முடியும்.ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில், மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும். வரும், 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவினருடன், ஆலோசனை நடக்க உள்ளது; அதன் பிறகு ஊரடங்கு குறித்து தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.'ஊரடங்கால் ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு'


''ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இரண்டு மாதங்களாக அரசுக்கு எவ்வித வருமானமும் இல்லை; 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.திருச்சி அவர் அளித்த பேட்டி:

ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட, ஒரு லட்சத்து, 57 ஆயிரத்து, 98 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசிடம் இருந்து, 4,145 கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு, 1,387 குடிமராமத்து பணிகளுக்கு, 498.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு, கொள்ளிடம் ஆற்றில் அணை கட்டும் பணி, 40 சதவீதம் முடிந்துள்ளது; மீதி பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

டெல்டா பகுதி கொள்முதல் நிலையங்களில், 25 லட்சத்து, 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும், 2 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை, 23 லட்சம் டன் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், வரலாற்று சாதனையாக, இந்த ஆண்டு, 27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு, தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்குவதில், மாறுபட்ட கருத்து இல்லை.
ஊரடங்கு காரணமாக, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், இரண்டு மாதங்களாக அரசுக்கு எவ்வித வருமானமும் இல்லை; 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthick Ram - Tiruppur,இந்தியா
30-ஜூன்-202010:05:43 IST Report Abuse
Karthick Ram அரசுக்கு ஊரடங்கால் ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு மட்டுமே முக்கியமாக தெரிகிறது. மக்களின் இன்றைய நிலைமையை புரிந்து கொள்ள தவறிவிட்டனர் .
Rate this:
Cancel
sudharman - chennai,இந்தியா
27-ஜூன்-202022:45:45 IST Report Abuse
sudharman லாக்டௌன் நீடிக்கலாம். மக்கள் வாழ்வது எப்படி ? அரசு 3 மaதத்திற்கு ஒரு முறை 1000 கொடுக்கும். அதை வைத்து எப்படி வாழ்வது? சிலிண்டருக்கே போதாது. அதே 1000 ரூபாயில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் வாழ்வார்களா . ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. குறைவாக பாதிக்கப்பட்டோர் இருக்கும் போதே உறுதியான நடவடிக்கை இல்லாமல் வெறும் ஊரடங்கு எப்படி தீர்வாகும். அதிகாரிகள் எட்டு கணக்கில் உள்ளனர். அக்டோபரில் அதிகம் ஆகும் என்றால் அதுவரை வெறும் ஊரடங்கு நீடிப்பு பலன் தருமா
Rate this:
Cancel
Venkat Subbarao - Chennai,இந்தியா
27-ஜூன்-202020:44:00 IST Report Abuse
Venkat Subbarao MUDIVAAGIVITTATHU APPURAM ENNA MARUTHTHUVAK KULIVINARUDAN AALOSANAI
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X