போலீசுக்கு தடை கோரி வழக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீசுக்கு தடை கோரி வழக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share

சென்னை; அலுவலகங்களுக்கு செல்ல, வழக்கறிஞர்களை அனுமதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கும், போலீசுக்கும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மவுலிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், ஆர்.கலையரசி தாக்கல் செய்த மனு:உயர் நீதிமன்றம் அருகே, என் மூத்த வழக்கறிஞர் அலுவலகம் உள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.

அத்தியாவசிய சேவை பணிகளில், நீதிமன்றமும் உள்ளது.காணொலி வழியாக வழக்குகள் விசாரிக்கப்பட்டாலும், மின்னணு முறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.அதற்கான ஆவணங்கள், வசதிகள், வழக்கறிஞர் அலுவலகங்களில் தான் இருக்கும்; வழக்கறிஞர்களின் வீடுகளில் இருக்காது. அதனால், அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம், வழக்கறிஞர்களுக்கு உள்ளது.வாகனங்களில், வீடுகளில் இருந்து அலுவலகம் செல்ல அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு, வழக்கறிஞர்கள் சங்கம், பார் கவுன்சில் கடிதம் அனுப்பி உள்ளது. அலுவலகம் செல்ல, என் வீட்டில் இருந்து புறப்பட்ட போது, வழியில் போலீசார் மறித்து, செல்ல விடாமல் தடுத்தனர்.டில்லி போன்ற நகரங்களில், வழக்கறிஞர்கள்அலுவலகம் செல்ல, எந்த தடையும் இல்லை. நீதிமன்றங்கள் இயங்கும் போது, வழக்கறிஞர்கள் செல்வதை கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே, வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சுமுகமான சூழ்நிலை இல்லை.எனவே, அலுவலகம் செல்லும் வழக்கறிஞர்களை, போலீசார் தடுக்கக் கூடாது; அவர்களை அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசும், போலீசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 2க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X