கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீசுக்கு பாதுகாப்பு வசதிகள் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; போலீசாருக்கு முழு உடல் கவசம், கிருமி நாசினி வழங்க, உத்தரவிட கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வாராகி என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் தடுப்பு பணியில், போலீசாரும் தீவிரமாக உள்ளனர். அவர்களுக்கு, உரிய பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்பட வேண்டும். சிறைகளிலும், நோய் தடுப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை.

கொரோனா தொற்றால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, போலீஸ் மற்றும் சிறை துறையில் அதிகரித்து வருகிறது.கைதிகளிடம், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து, மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்களில், ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.எனவே, போலீசார், சிறைத்துறையினர், கைதிகளுக்கு முழுமையான பரிசோதனை நடத்த வேண்டும்; அவர்களுக்கு, உடல் கவசம், கிருமி நாசினி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. போலீசார், சிறைத்துறையினர், கைதிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X