கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நன்கொடை விபரங்கள் ஐகோர்ட்டில் அரசு பதில்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; 'குறைவான ஊழியர்கள் பணிக்கு வருவதால், நன்கொடை குறித்த முழு விபரங்களை வெளியிட தாமதம் ஏற்படுகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், 'கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கப்படுகிறது. 'இதுவரை எவ்வளவுநிதி வந்துள்ளது; பயனாளிகள் எவ்வளவு என்ற, விபரங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து, அறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:நன்கொடை வழங்கியவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இணையதளத்தில், விபரங்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வழிகளில் நிவாரண தொகை வந்துள்ளது.அவற்றை ஒருங்கிணைத்து, இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 10 லட்சம் ரூபாய்க்கும் மேல், நன்கொடை அளித்தவர்களின் விபரங்கள், பத்திரிகைகளில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.மத்திய அரசின் வழிமுறைகளின்படி, முதல்வரின் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட தொகை, மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்துக்கு மாற்றப்படுகிறது.பாதுகாப்பு ஆடைகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கவும், சுகாதார மேம்பாட்டுக் காகவும், இந்த தொகை பயன்படுத்தப்படுகிறது.குறைவான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றுவதால், முழுமையான விபரங்களை வெளியிட தாமதம் ஏற்படுகிறது.

இதில், மறைப்பதற்கு ஏதும் இல்லை. வெளிப்படைத்தன்மையுடன், அவ்வப்போது விபரங்கள் வெளியிடப்படுகின்றன.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.விசாரணை, வரும், 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X