பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் ரூ.580 கோடி பயிர் கடன்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; கூட்டுறவு வங்கிகளில், நடப்பு நிதியாண்டில், இதுவரை, 74 ஆயிரம் விவசாயிகளுக்கு, 580 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், பயிர் கடன், தங்க நகை அடமான கடன் போன்றவற்றை வழங்குகின்றன. பயிர் கடனானது, விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. ஓராண்டிற்குள் கடன் தொகையை செலுத்தினால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படும்.

இதனால், விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில், அதிகளவில் பயிர் கடன் பெறுகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ சாகுபடி முழு வீச்சில் நடைபெறுகிறது. இதனால், தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும், தாமதம் செய்யாமல், பயிர் கடன்களை விரைந்து வழங்கும்படி, கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டது.

இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் இம்மாதம், 22ம் தேதி வரை, 74 ஆயிரம் விவசாயிகளுக்கு, 580 கோடி ரூபாய் அளவுக்கு பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முழுதும், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயிர் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X