அரசியல் செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகன் குடும்பத்திற்கு அதிமுக, திமுக தலா ரூ.25 லட்சம் நிதி

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
admk, dmk, MK Stalin, Stalin, தந்தை,மகன் குடும்பம்,அதிமுக.,திமுக.,ரூ25 லட்சம் நிதி

சென்னை :நீதிமன்ற காவலில் இறந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு, தி.மு.க., 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. ''வழக்கு விசாரணையை வேகமாக நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க, சட்ட ரீதியாகவும் துணை நிற்போம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த நிகழ்வு குறித்து, தன் சமூக வலைதள பக்கங்களின், 'வீடியோ'வில், ஸ்டாலின் நேற்று பேசியதாவது:ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரு பெயர்களை, சில நாட்களில் யாரும் மறந்திருக்க முடியாது. இவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் சோகமும், அநீதியும் வார்த்தைகளால் அடக்க முடியாதவை.

தன் கடையை ஊரடங்கு நேரத்தில் மூட தாமதம் செய்தார் என்ற காரணத்திற்காக, இப்படிப்பட்ட தாக்குதல்களை நிகழ்த்த, போலீசாருக்கு யார் அனுமதி அளித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள, மூன்று பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க, தி.மு.க., சார்பில், 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளோம்.

இந்த வழக்கின் விசாரணையை வேகமாக நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க, சட்ட ரீதியாகவும் தி.மு.க., துணைநிற்கும். இந்த உயிர் பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதல்வர் தான்; மக்கள் மன்றத்தால், விரைவில் அவர் தண்டிக்கப்படுவார். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


அ.தி.மு.க.,வும் ரூ.25 லட்சம் நிதி உதவி


'துாத்துக்குடி மாவட்டத்தில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு இறந்த வியாபாரிகளின் குடும்பத்திற்கு, அ.தி.மு.க., சார்பில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்து உள்ளனர்.


ஆணையத்தில் கனிமொழி மனு


தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, புகார் மனு அளித்துள்ளார்.

மனுவில், அவர் கூறியிருப்பதாவது: ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சை போலீஸ் துறையினர் நடத்திய விதம், மனித உரிமை மீறலாக இருந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள, வழிகாட்டுதல்களை போலீசார் பின்பற்றவில்லை.தமிழக அரசு பிறப்பித்துள்ள, போலீஸ் துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளில், போலீஸ் துறை விசாரணையில், 15க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில், ஒரு மரணத்தில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கனிமொழி கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
28-ஜூன்-202008:38:58 IST Report Abuse
nizamudin அவர்களை தண்டித்தவர்களுக்கு அதே தண்டனை கொடுத்து அந்த வேதனை புரிய வைத்தால் இந்த மாதிரி கொடுமைகள் இனி நடக்காது /////
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
28-ஜூன்-202007:37:05 IST Report Abuse
sridhar இதிலும் கூட தசம பாகம் கேட்க ஒரு கூட்டம் வரும்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
28-ஜூன்-202007:29:03 IST Report Abuse
sridhar இது போல் எல்லா சிறை மரணத்திற்கும் கட்சிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் நாட்கணக்கில் பொங்கி இருக்கிறதா ? ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறதா ?. ஜாதி . மதம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X