பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகள் இன்று முதல் திறப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; சென்னை உட்பட, முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில், 1,000 ரூபாய் நிவாரண வழங்கும் பணி, நேற்றுடன் முடிந்ததால், ஐந்து நாட்களுக்கு பின், இன்று ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களிலும், இம்மாதம், 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அந்த பகுதிகளில் வசிக்கும், 21.83 லட்சம் அரிசி கார்டுதாரர்களின் வீடுகளில், தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி, 22ம் தேதி துவங்கியது.

நேற்றுடன், வீடுகளில் நிவாரணம் வழங்கும் பணி முடிந்தது. நேற்று மதியம் வரை, 90 சதவீதம் பேருக்கு மேல் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு பகுதிகளில், திங்கள் முதல் நேற்று வரை மூடப்பட்ட ரேஷன் கடைகள், ஐந்து நாட்களுக்கு பின், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. 'நிவாரண தொகை வாங்காதவர்களுக்கு, இன்று முதல், ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X