கோர்ட் செய்தி

தமிழ்நாடு

9,319 வழக்குகளில், 'டாஸ்மாக்' நடவடிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; 'நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமாக, மதுபானம் விற்ற வகையில், ஓராண்டில், 9,319 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'டாஸ்மாக்' நிர்வாகம் பதில் அளித்து உள்ளது.

திருத்தப்பட்ட விலைசேலம் மாவட்டத்தை சேர்ந்த, குல்லுபடையாச்சி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'மதுபான கடைகளில், அனைவரும் பார்க்கும் வகையில், விலை பட்டியலை வைக்க வேண்டும். 'மது பாட்டில்களை குறிப்பிட்ட விலைக்கும் அதிகமாக விற்பதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.செல்வராஜ் ஆஜரானார். 'டாஸ்மாக்' நிறுவன நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார், பதில் மனு தாக்கல் செய்தார். விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:திருத்தப்பட்ட விலை பட்டியல், அனைத்து மதுபான கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடைகளில் சோதனை நடத்த, மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.முறைகேடுஅதிக விலைக்கு மதுபானங்களை விற்பவர்களுக்கு, கடுமையான தண்டனை விதிப்பது குறித்து, 2019 ஜனவரியில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஊழியர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், 1,000 ரூபாய் முதல், 9,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இடமாற்றம் மற்றும் தொடர்ந்து தவறு செய்தால், 'சஸ்பெண்ட்' நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், 2020 மார்ச் வரை, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, 10 ரூபாய் வரை கூடுதலாக விற்ற வகையில், 4,664 வழக்குகளும்; 10 ரூபாய்க்கும் அதிகமாக விற்ற வகையில், 4,655 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முறைகேடில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி, கடைகளில் மதுபானங்கள் வழங்குவதை, டாஸ்மாக் நிர்வாகம் உறுதி செய்கிறது. மதுபானம் தயாரிக்கும் ஆலையில், தயாரிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, துணை கலெக்டர் அந்தஸ்தில், அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X