அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடுதோறும், 'ரேபிட்' சோதனை: வழக்கு தொடர தி.மு.க., முடிவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; 'எதிர்ப்பு சக்தியை கண்டறியும், 'ரேபிட்' பரிசோதனையை வீடு வீடாக நடத்த உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் கூறியுள்ளார்

.'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று நான்கு மாதங்களாக பரவி வருகிறது. என்னையும் அறியாமல், சிறு, சிறு தொற்று ஏற்பட்டு, எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.எதிர்ப்பு சக்தியை தெரிந்து கொள்ளும், 'ரேபிட் கார்டு' பரிசோதனை செய்து கொண்டால், நான் தைரியமாக இருக்க முடியும்.உ.பி., - மஹாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும், வீடு, வீடாக சென்று, 'ரேபிட்' பரிசோதனை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசின் வழிகாட்டுதல் நிறுவனங்களில், தரமான பரிசோதனை கருவிகளை வாங்கி, தினமும் லட்சக்கணக்கில் பரிசோதனை செய்தால், தொற்றை தடுக்க முடியும்.இந்த கோரிக்கையை, மதுரை கலெக்டர் மற்றும் கொரோனா சிறப்பு பொறுப்பாளர் டாக்டர் சந்திரமோகனிடம் வழங்கியுள்ளேன். அரசு செவிசாய்க்கவில்லை என்றால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் கலந்தாலோசித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.இவ்வாறு, சரவணன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X