அரசியல் செய்தி

தமிழ்நாடு

5 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டேன்: ஜெயகுமார்

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 5 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டேன்: ஜெயகுமார்

சென்னை: ''கொரோனாவை கண்டு நான் அஞ்சவில்லை; உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கொரோனா என்ற தகவலால், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டேன்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அதிகமாக, ஒரு நாளைக்கு, 38 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நோய் தடுப்பு நடவடிக்கைகள், முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றன.அரசு தன் கடமையை செய்து வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும், வெளியில் செல்ல வேண்டும். மற்ற நேரங்களில் செல்லக் கூடாது.

தமிழகம் முழுதும், முதல்வர் உத்தரவுப்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவசமாக முக கவசம் வழங்கப்படுகிறது. கொரோனா எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியவில்லை. எனவே, பேன்ட், சட்டை அணிவது போல, வெளியில் செல்லும் போது, கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.முக கவசம்அணிந்தால், நோய் தொற்று வராது. வெளியில் இருந்து வீட்டிற்குள் செல்லும் போது, கைகளை சோப்பால் கழுவ வேண்டும். மக்கள் ஒத்துழைத்தால், கொரோனா இல்லாத உலகம் உருவாகும்.சென்னையில், உயர்கல்வித் துறை அமைச்சருக்கு நோய் தொற்று இருப்பதாக தகவல் வந்தது. அவருடன் நான் இருந்ததால், ஐந்து நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

என் மகன், உயர்கல்வித் துறை அமைச்சருடன் சென்றதால், அவரும் தனிமைப்படுத்திக் கொண்டார்.இருவருக்கும் நடந்த பரிசோதனையில், 'நெகட்டிவ்' என்பது உறுதியானது. அதன்பிறகே களத்திற்கு வந்தேன். கொரோனாவுக்கு நான் அஞ்சுவதில்லை.எதையும் சந்திக்க தயார். உயிரை நாங்கள் பொருட்படுத்தவில்லை.மக்களுக்கு சேவை செய்வது தான், எங்கள் நோக்கம். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, ஆலோசனை பெற்று, முதல்வர் முடிவு செய்வார்.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-202002:28:26 IST Report Abuse
naadodi அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
27-ஜூன்-202013:15:11 IST Report Abuse
Chandramoulli வாய் சவடால் இப்போது வேண்டாம். 28 நாள் தனிமைப்படுத்தல் அவசியம் . சுடலை க்கு வாய்ப்பு கொடுத்த மாதிரி ஆகி விடும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
27-ஜூன்-202008:39:46 IST Report Abuse
blocked user 5 நாள் என்பது போதாது. குறைந்த பட்சம் 15. 21 நாள் வரை கவனமாக இருக்க வேண்டும். நோயாளிகளிடம் நெருக்கம் காட்டினால் மூன்று நாட்களுக்குள் நோய் வந்து விடும். குறைவான நெருக்கம் என்றால் அதிக நாள் ஆகலாம். மிக சாதாரண நெருக்கம் என்றால் நோய் வர வாய்ப்பு குறைவேயன்றி - முழுவதும் இல்லாமல் இல்லை. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி எளிதில் பற்றிக்கொள்ளும் நோய் இது. ஆகவே மெத்தனமாக இருக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X