காட்சிப்பொருளான தெருவிளக்கு: இருளில் மூழ்கியது அண்ணாநகர்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை நகரின் மத்தியில் அண்ணாநகர் அமைந்துள்ளது. இங்கு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நகராட்சி தெருவிளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'அண்ணாநகரில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்து வளர்ப்பு பிராணிகளை கொன்று விடுகிறது. இதனால், இரவு நேரத்தில் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும், வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமலும் அச்சத்தில் உள்ளோம். அண்ணாநகரில் மட்டும் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. மக்கள் நலன் கருதி அண்ணாநகரில் உள்ள தெருவிளக்கை மீண்டும் ஒளிரச் செய்ய வேண்டும்,' என்றனர்.ஆனால், தெருவிளக்குகளை பராமரிக்கும் நகராட்சி நிர்வாகம், மக்கள் சேவையை மறந்து, வளர்ச்சி பணிகளில் கமிஷன் பெறுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X