பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தக வாசிப்பு: மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படுத்த வலியுறுத்தல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

உடுமலை:கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த, புத்தக வாசிப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உடுமலை நுாலக வாசகர் வட்டத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.புத்தக வாசிப்புகள் எப்போதும் மனதை தெளிவு பெற செய்வதுடன், சிறந்த புத்தகங்கள், மனிதர்களின் சிறந்த நண்பர்களாகவும் அவர்களை வழி நடத்துகின்றன. இதனால், குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புகளை மேம்படுத்த வேண்டும் என அரசும் பலவழிகளில் ஊக்கப்படுத்தி வருகிறது. தற்போது, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பலரும் உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும், தன்னம்பிக்கை இழந்து, கூடுதல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையை கட்டுப்படுத்த, புத்தகங்கள் சிறந்த வழியாக இருக்கும் என உடுமலை முதற்கிளை நுாலகர் வாசகர் வட்டத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.வாசகர் வட்டத் தலைவர் லெனின் பாரதி கூறியதாவது: கொரோனா சிகிச்சை பெற்று வருவோர், உடல் முழுமையாக குணமடைய மனதளவிலும் அவர்கள், உறுதியுடன் இருக்க வேண்டும். தற்போது, மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை, ஊக்கப்படுத்த புத்தகங்கள் ஒரு சிறந்த கருவியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு கொரோனா வார்டுகளிலும், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் நுால்களை, சிகிச்சை பெறுவோர் பயன்படுத்துவதற்கு வழங்கலாம்.ஒருவருக்கு மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் வீதம், அவர்களே அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழங்க வேண்டும். இதனால், அவர்கள் மனதளவில் அமைதி பெற வாய்ப்புள்ளது.உடுமலை முதற்கிளை நுாலகர் வாசகர் வட்டத்தின் சார்பில் உடுமலை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டுக்கு புத்தகங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதுபோல், தன்னார்வலர்கள், நுாலக வாசகர் வட்டத்தினர், முன்வந்து, கொரோனா வார்டுகளுக்கு புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X