பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியருக்கு கொரோனா அண்ணா நுாலகம் மூடல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; பெண் நுாலகருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகம் மூடப்பட்டது.

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நிர்வாக பணிகள் மட்டுமே நடந்து வந்தன; வாசகர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 33 சதவீத பணியாளர்கள், சுழற்சி முறையில், தினமும் பணிக்கு வந்தனர்.

இந்நிலையில், நுாலகத்தின் முதல் மாடியில், பணி அமர்த்தப்பட்ட பெண் நுாலகர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், நேற்று முன்தினம் வரை பணிக்கு வந்ததால், நுாலக கட்டடம் உடனடியாக மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, பணிக்கு வந்த நுாலக ஊழியர்கள் மற்றும் நுாலக கட்டடத்தில் இயங்கும் கல்வி தொலைக்காட்சி ஊழியர்களுக்கு, பரிசோதனை செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அமைச்சர் கூட்டம்இரு தினங்களுக்கு முன், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இந்த நுாலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அவருடன் அதிகாரிகளும், ஊழியர்கள் சிலரும், நுாலக கட்டடத்துக்கு வந்துள்ளனர். எனவே, அவர்களில் யாருக்காவது தொற்று பரவியிருக்குமா என்ற, அச்சம் எழுந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X