பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி, பழங்கள் வீடுகளுக்கு வினியோகம்

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; சென்னையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு காய்கறிகள், பழங்களை, தோட்டக்கலை துறை வினியோகம் செய்து வருகிறது.

சென்னையின் பல்வேறு மண்டலங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைக்க, தோட்டக்கலை துறை வாயிலாக, 15 மண்டலங்களிலும், நடமாடும் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு தரமான காய்கறிகள், பழங்கள் குறைந்த விலையில், பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன.

இத்திட்டம், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுஉள்ளது. சென்னையில், தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள், சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இப்பகுதி மக்கள், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் குடும்பத்தினர் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.

இதனால், தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் மற்றும் வீடுகளில் வசிப்போருக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்களை வழங்க வேண்டும் என, தோட்டக்கலை துறையினரிடம், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வினியோகம் செய்யும் பணிகளை, தோட்டக்கலை துறையினர் துவங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
27-ஜூன்-202011:30:53 IST Report Abuse
R. Vidya Sagar E-Thottam முதலில் நன்றாக இருந்தது. இப்பொழுது அந்த சேவையையே காணோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X