இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

Added : ஜூன் 26, 2020
Share
 இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நெ.10 முத்துாரில் உருக்குலைந்து ஆபத்தான நிலையிலுள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, நெ.10 முத்துாரில், எம்.எல்.ஏ., நிதியில் கிராம நிர்வாக அலுவலர் கட்டடம், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கட்டடம் பராமரிப்பு பணி செய்யப்படாமல் இருந்ததால், பழுதடைந்துள்ளது. இதில் உள்ள வருவாய்துறை பதிவேடுகள், மழை காலங்களில் கட்டடத்தில் இருந்து கசியும் மழை தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, அருகில் புதிதாக கட்டப்பட்ட பலநோக்கு மையத்திற்கு, கிராம நிர்வாக அலுவலகம் கடந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு, இயங்கி வருகிறது. கட்டடத்தின் மேற்கூரை கான்கிரீட் உதிர்ந்து வருவதால், விரைவில் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் உள்ளது.கோவில் விசேஷ காலங்களில் இக்கட்டடத்தின் முன்பு தான் மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஆபத்தான நிலையிலுள்ள கட்டடத்தை இடிக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X