பொது செய்தி

தமிழ்நாடு

இணைய மின் கட்டண சேவை இன்று நிறுத்தம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; இணையதளம் வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் சேவையை, பராமரிப்பு பணிக்காக, மின் வாரியம் இன்று இரவு வரை நிறுத்தியுள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, மின் கட்டண மையங்களில் மட்டுமின்றி, அதன் இணையதளம், மொபைல் செயலி, 'பாரத் பில்' உள்ளிட்ட சேவைகளிலும் செலுத்தலாம்.சென்னை போலீஸ் எல்லை பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் சில இடங்களில், 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், 'ஊரடங்கு பகுதிகளில் உள்ள, மின் கட்டண மையங்கள் செயல்படாது; மின் கட்டணத்தை செலுத்த, ஜூலை, 15 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது; இணையதளம் உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் கட்டணத்தை செலுத்தலாம்' என, மின் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், 'சர்வரில்' பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், நேற்று இரவு, 8:00 முதல், இன்று இரவு, 11:59 மணி வரை, இணையதளம் வாயிலாக, மின் கட்டணத்தை செலுத்தும் சேவை நிறுத்தப்படுவதாக, மின் வாரியம் அறிவித்துள்ளது. இதனால், எந்த பகுதியில் வசிப்போரும், இன்று மின் வாரிய இணையதளத்தில், மின் கட்டணத்தை செலுத்த முடியாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X