பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் தவித்த 198 பேர் சென்னை வந்தனர்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளில் தவித்த, 198 இந்தியர்கள், மூன்று சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர, மத்திய அரசு, சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா நாடுகளிலிருந்து, நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை, மூன்று சிறப்பு விமானங்கள், சென்னைக்கு வந்தன. அந்த விமானங்களில், 198 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். சென்னையில் இருந்து நேற்று, 28 விமானங்கள், பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து, 27 விமானங்கள் சென்னை வந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X