பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

உடுமலை:ஊரடங்கு காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்காக, திருப்பூர் மாவட்டத்தில், 5 மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் கடந்த மே மாதம், 27ல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது; 1,500 ஆசிரிய, ஆசிரியைகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதே மையத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியும் கடந்த, 15ம் தேதி முதல் துவங்கியது. பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களே இதிலும் ஈடுபட்டனர்.திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் கணினி மூலம் 'ஆன்லைனில்' மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்பட்டது. வழக்கமாக, மதிப்பீடு முடிந்ததும், சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படும்.தற்போது கொரோனா காரணமாக, ஆவணங்கள் அனைத்தும் அந்தந்த மையங்களிலே வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X