ரூ.3க்கு வாங்கி 24க்கு விக்குறாங்க:வெண்டை விவசாயிகள் வேதனை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சந்தையில், கிலோ மூன்று ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் வெண்டைக்காய், கடைகளில், 24 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொள்ளாச்சியில் தென்னைக்கு அடுத்தப்படியாக, காய்கறி சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்களை, நகரில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று, ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.இந்தாண்டு, வெண்டை சாகுபடி கணிசமாக செய்யப்பட்டுள்ளது. கடந்த சில சில வாரங்களாக, மார்க்கெட்டில் வெண்டைக்காய் மிக குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்குகின்றனர். நேற்று முன்தினம் மார்க்கெட்டில் கிலோ மூன்று ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால், நேற்று காய்கறி கடைகளில் வெண்டைக்காய் கிலோ, 24 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதைக்கண்ட விவசாயிகள், கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'தென்னையில் கட்டுபடியான வருவாய் கிடைக்காததால், ஊடுபயிராக வெண்டை சாகுபடி செய்கிறோம். நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயிகள் சிலர் தனிப்பயிராகவும் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், வெண்டைக்காய் வரத்து அதிகம் உள்ளதால், விலை கிடைப்பதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால், அதே மார்க்கெட்டில், பல மடங்கு விலை வைத்து மக்களுக்கு விற்கின்றனர்.உற்பத்தி செய்த விவசாயிகளுக்கும் நஷ்டம்; வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கும் அதிக செலவு ஏற்படுகிறது. இந்த போக்கை வியாபாரிகள் கை விட வேண்டும்.வியாபாரிகள், இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பதை தவிர்க்க, விளைபொருட்களுக்கு விலை நிர்ணயத்தில் அரசு தலையிடுவது காலத்தின் கட்டாயமாகிறது. அப்போது தான், விளைவிக்கும் விவசாயிகளும், வாங்கும் மக்களும் பாதிப்பதை தடுக்க முடியும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X