அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்'

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை; தி.மு.க., செய்தி தொடர்பாளர், டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி:தமிழக சிறைகளில், இதுவரை, 260 பேர் இறந்துள்ளனர்.

துாத்துக்குடியில் இதற்கு முன், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சாத்தான்குளத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸ் என, தந்தை, மகன்உயிரிழந்துள்ளனர்.அவர்கள் குடும்பத்திற்கு, அரசு, 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்; குடும்பத்தில், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.போலீஸ் துறை மீது, எங்களுக்கு நம்பிக்கை இழக்கும் போது, கடைசி யில், எங்கள் புகலிடம் நீதிமன்றம் தான். நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்துள்ளது.

அதில், நாம் எதுவும் செய்ய முடியாது. நீதிமன்றம் முறையான நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறோம். போலீஸ் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், முதல்வரே போலீஸ் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறாரோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது. இவ்வாறு, இளங்கோவன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூன்-202007:44:21 IST Report Abuse
RajanRajan கேக்குறதே கேக்குற ஒரு பத்து கோடியாய் கேக்குறது தானே. அங்கே இங்கேன்னு ஒரு பிரியாணி வெட்டி மிச்சம் மீதி தேறுதான்னு பார்க்கலாம். எல்லாம் கடைத்தேங்காய் உடைக்கிற வித்தை தானே.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
27-ஜூன்-202002:09:18 IST Report Abuse
Baskar அப்போ நீங்கள் செய்த கொலைகளுக்கும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாம் போலீஸ் கையில் உள்ளது. உடனே காவல்துறை பழைய கொலை கேஸ்களை தட்டி எழுப்பி தி.மு.க செய்த கொலைகளை பட்டியலிட்டு தண்டனை கொடுக்க வேண்டும். சாதிகபாட்ஷா தினகரன் நாளிதழ் கொலை இன்னும் ராமஜெயம் போன்றவற்றை வெளியே கொண்டு வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X