பொது செய்தி

தமிழ்நாடு

அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சோலையாறில் நீர்மட்டம் உயர்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சோலையாறில் நீர்மட்டம் உயர்வு

வால்பாறை:வால்பாறையில், தொடர்ந்து பெய்யும் பருவமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.வால்பாறையில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் நேற்று காலை முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது.பரவலாக பெய்யும் மழையால், மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 172 கனஅடி தண்ணீர் சோலையாறு அணைக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 63.55 அடியாக இருந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்): சோலையாறு - 10, வால்பாறை - 6, மேல்நீராறு - 7, கீழ்நீராறு - 10, என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X