சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடத்தை கிரையம் செய்வதாக ரூ.30 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:பரமக்குடி சவுக்கத்தலி தெரு பாலச்சந்தர். இவரிடம் கொட்டாப்புளி தெரு ராஜசேகரன், அவரது சகோதரர்கள் மணிவாசன், மதுரை புட்டுத்தோப்பு பொன்னகரம் 4-வது குறுக்கு தெரு வெங்கடேசன். இவர்கள் மூவரும் பரமக்குடி 16வது வார்டில் 269 சதுர அடி நிலத்திற்கு பாலச்சந்தரிடம் கிரைய உடன்படிக்கை செய்தனர்.

இதற்கு முன் பணமாக ரூ.30 லட்சம் பெற்றனர். ஆனால் கிரைய உடன்படிக்கையில் கூறியபடி அந்த சொத்தை பாலச்சந்தர் பெயரில் கிரையம் செய்யவில்லை. மேலும் ராஜசேகரன், லதா ஆகியோர் பெயரில் கிரையம் செய்தனர். பாலச்சந்தர் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜசேகரன், லதா, மணிவாசன், வெங்கடேசன் ஆகிய நால்வர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X