கட்டமைப்பு சிறப்பாக உள்ளது: மக்கள் பயப்பட வேண்டாம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கட்டமைப்பு சிறப்பாக உள்ளது: மக்கள் பயப்பட வேண்டாம்'

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை: ''பரிசோதனை முதல் சிகிச்சை வரை, அனைத்து கட்டமைப்புகளும் சிறப்பாக இருப்பதால், மக்கள் பயமின்றி இருக்கலாம்,'' என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.சென்னை, கொடுங்கையூரில், கொரோனா தடுப்பு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஆலோசனை வழங்கிய அவர் கூறியதாவது:மும்பை, டில்லியை ஒப்பிடும் போது, சென்னையில் பரவல் குறைவாகவே உள்ளது. மக்களுக்கு தேவையான

சென்னை: ''பரிசோதனை முதல் சிகிச்சை வரை, அனைத்து கட்டமைப்புகளும் சிறப்பாக இருப்பதால், மக்கள் பயமின்றி இருக்கலாம்,'' என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

சென்னை, கொடுங்கையூரில், கொரோனா தடுப்பு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஆலோசனை வழங்கிய அவர் கூறியதாவது:மும்பை, டில்லியை ஒப்பிடும் போது, சென்னையில் பரவல் குறைவாகவே உள்ளது. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு கிடைத்துள்ளது. கொரோனாவை அரசு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை, தற்போது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முதல் சிகிச்சை வரை, அனைத்து கட்டமைப்புகளும் சிறப்பாக இருப்பதால், மக்கள் பயமின்றி இருக்கலாம்.

தொடர்ந்து, 18 நாட்களாக மேற்கொண்ட நடவடிக்கைகளால், முதல் இடத்தில் இருந்த தண்டையார்பேட்டை, தற்போது, ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வரும். பரிசோதனை அதிகரிப்பதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகும். அதே நேரம், குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.இவ்வாறு, பாண்டியராஜன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X