பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறை நகராட்சியில் என்ன நடக்குது! கை கழுவ தண்ணீர், கிருமி நாசினி இல்லை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 வால்பாறை நகராட்சியில் என்ன நடக்குது! கை கழுவ தண்ணீர், கிருமி நாசினி இல்லை

வால்பாறை:வால்பாறை நகரில், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில், பயணிகள் கை கழுவ வசதியாக அமைக்கப்பட்ட, வாஷ்பேஷனில் தண்ணீர் சப்ளை இல்லாததால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வால்பாறையில், 20 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மலைப்பகுதியில் பஸ் ஊழியர்கள், நோய் தொற்று அபாயத்துக்கு இடையிலும், பொதுமக்கள் வசதிக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.அவர்களின் பாதுகாப்புக்காக, அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், முகக்கவசம், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு முறை பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வந்ததும், நகராட்சி துாய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட், பயணிகள் நிழற்க்கூரை உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வசதியாக, தண்ணீர் வசதியுடன் வாஷ்பேஷன் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக, வாஷ்பேஷனில் தண்ணீரும் இல்லை, கிருமி நாசினியும் வைக்கப்படவில்லை. இதனால் மக்கள் கைகழுவ தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். நோய் தொற்று அச்சம் அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் நகராட்சி நிர்வாகத்தின் இது போன்ற அலட்சியப் போக்கால், வால்பாறை மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.தமிழக முதல்வர், அமைச்சர்கள் களமிறங்கி பணியாற்றும் நிலையில், வால்பாறை நகராட்சியில் கமிஷனர், மற்றும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு பல்வேறு சர்ச்சைக்கு வழிவகுக்கிறது.நகராட்சி அதிகாரிகள் அரசு கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்களா, அல்லது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி, மக்களை நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் வகையில் செயல்படுகிறார்களா என, ஆளுங்கட்சியினரே கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X