வீடுகள் முன் தேங்கியுள்ள மழைநீர்வெளியே செல்ல சிரமப்படும் மக்கள்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 வீடுகள் முன் தேங்கியுள்ள மழைநீர்வெளியே செல்ல சிரமப்படும் மக்கள்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே ஓம்சக்திநகர் 3வது தெருவில் வீடுகள் முன்பு மழைநீர் தேங்கி கிடப்பதால் மக்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றனர்.பட்டணம்காத்தான் ஊராட்சியைச் சேர்ந்த ஓம்சக்திநகர் 3வது தெருவில் 50க்குமேற்பட்ட வீடுகள் உள்ளன.

இத்தெரு அரண்மனை சாலை ரோட்டை விட மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் சிறிய மழைபெய்தால் கூட தெருவில் தண்ணீர் தேங்கி விடுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் கனமழை பெய்தது, அப்போது வீடுகளுக்கு முன்மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விடுகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த அழகேசன் கூறுகையில், 'மழை பெய்தால் தெருவில்மழைநீர் தேங்கிவிடுகிறது. தண்ணீரை வெளியேற்ற வேண்டும். மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் ஊராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X